Sunday, May 20, 2007

இந்திய உளவுத்துறைக்கு (றோ) திரைக்கதை எழுத ஆட்கள் தேவை

இந்திய உளவு நிறுவனத்திற்கும், தமிழ் நாட்டு காவல்துறைக்கும் எதிர்காலத்தில் திறமையான கடத்தல் நாடகத்தை நடத்த ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என சில சூசகமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் நமக்கு கசிந்துள்ளன. முன்பெல்லாம் உளவுத்துறை கொடுக்கும் செய்தியை இன்னும் அதிக "பில்டப்" செய்து வெளியிட இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்பொழுது வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த "மக்கள்" எல்லாம் மைக்பிடித்து சந்து பொந்துகளில் புகுந்து உண்மையை வெளிக்கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதால் கடுமையான சவாலினை தற்போதைய திரைக்கதை குழு எதிர்கொண்டுள்ளது.

நடத்தப்பட்ட கடத்தல் நாடகத்தில் பல ஓட்டைகள் இருப்பதை இன்று நள்ளிரவு கூடிய உளவுத்துறை கூட்டம் கண்டறிந்தது. இந்தக் குழு எம்.கே.நாராயணன் தலைமையில் நடந்தது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக "உளவுத்துறை" கண்ட கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

கேப்டன் விஜயகாந்த் தனது உளவுத்துறை திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு திரைக்கதையில் இருக்கும் பல ஓட்டைகளை சுட்டிக்காட்டினார்.

முதல் ஓட்டை :
"நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இருந்தது. அனைவரும் இலங்கைத் தமிழில் பேசினர். அவர்கள் கொண்டு சென்ற இடங்களிலும் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கப் பாடல்கள் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. "


இதுவெல்லாம் ஆதி காலத்து டெக்னிக். அதுவும் இவர்கள் <-> அவர்கள் மீதும், அவர்கள் <-> இவர்கள் மீதும் பழி போட்டுகொண்டிருக்கும் பொழுது இவ்வளவு "வெள்ளேந்தியாக" ஒரு "டெரரிஸ்ட் க்ரூப்" தன் போட்டோவையும் போட்டு, பாட்டையும் போட்டு கடத்துவது கோலிவுட்டில் கூட காமெடிப் படங்களில் தான் நடக்கும். "சீரியஸ் படங்களில் கோலிவுட்டில் கூட நாங்கள் வைக்க மாட்டோம்" என்று கேப்டன் விஜயகாந்த் கூற, எம்.கே.நாரயணன் முகர்ஜியை பார்த்து "நற நற" என்று முறைத்தார். முகர்ஜி அவசரமாக பாத்ரூம் பக்கம் ஓடினார்.

இரண்டாவது ஓட்டை
"அவர்கள் வேறு எதற்காகவும் எங்களைக் கடத்தவில்லை. எங்களது படகு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காகத்தான் கடத்திச் சென்றனர் என்றார் கிளமென்ட்ஸ்"

கேப்டன் விஜயகாந்த் இடி இடியென்று சிரித்தார்.
"எப்படிங்க இப்படியெல்லாம் காமெடி சீன் வைக்கறீங்க. நாங்க கூட இப்படி காமெடி சீன் வைக்க முடியாம ரொம்ப கஷ்டப்படறோம். ஆனா இதனை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணலாம். அதாவது மீனவர்கள் ரொம்ப ரூசியான மீன் கொழம்பு வைச்சிருந்தாங்க. அதனால தான் கடத்தினோம் அப்படின்னு வைச்சா இன்னும் காமெடியா இருக்கும்" என்று மறுபடியும் சிரித்தார் விஜயகாந்த்

எம்.கே.நாராயணனும் துன்பத்தை மறந்து இன்பமாக சிரித்தார்

மூன்றாவது ஓட்டை
"செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்க முயன்றனர். ஆனால் அப்போது குறுக்கிட்ட கியூ பிரிவு அதிகாரி நாஞ்சில் குமரன், இன்னும் அவர்களிடம் நாங்கள் பல தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. மீனவர்கள் வீடு திரும்பிய பின்னர் அவர்களை நேரில் பார்த்து உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளளாம் என்றார்."

"இது தான் நீங்க செஞ்ச பெரிய தப்பு. முதல்ல மீனவர்களுக்கு டியூசன் எடுக்கனும். என்ன கேள்வி கேட்பானுங்க, எப்படி பதில் சொல்லனும்னு டியூசன் எடுத்து, உங்க முன்னாடியே ஒரு ரிகர்சல் நடத்தியிருக்கனும். அவிங்க ஏதாவது எசகு பிசகா உளற ஆரம்பிச்சாலும் அதை சரி செய்திருக்கலாம். அத விட்டுபுட்டு வீட்டுக்கு போய் கேள்வி கேளுங்க அப்படின்னு சொல்லிபுட்டீங்க. அதுவும் வயகாட்டுல இருக்குற எசகு பிசகான ஆளுங்க மைக்க பிடிச்சுக்கிட்டு எவனை பிடிக்கலாம் அப்படின்னு இருக்கறப்ப இப்படி மாட்டிக்கிட்டீகளே மக்கா"

என்றார் கேப்டன் விஜயகாந்த்.

மிகப் பெரிய ஓட்டை

ஓட்டையிலேயே மிகப் பெரிய ஓட்டை எதுன்னா...

"யாருப்பா...இந்த திரைக்கதையை டைரக்ட் செஞ்சது. ஒரு 13 வயசு பையன எல்லாம் இந்த ஆட்டத்துல ஏம்பா சேர்த்துக்கிறீங்க. பாவி பய புள்ள, அப்படியே உண்மையை புட்டு புட்டு வைச்சிடானய்யா, ஆப்பு வைச்சிடானய்யா, ஆப்பு...."

இப்படி ஒரு ஓட்டையான திரைக்கதையை அமைத்ததால் கடும் கோபத்தில் இருக்கும் றோ, எதிர்காலத்தில் அரங்கேற்றப்படும் கடத்தல் நாடகத்திற்கு திரைக்கதை எழுத புதிய உதவி டைரக்டர்களை தேர்வு செய்வது பற்றி யோசித்து வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சோ, இந்து ராம் போன்றவர்களின் சிபாரிசு கடிதத்துடன் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வேலைவாய்ப்பு வலையிதழ் மூலம் செந்தழலார் அறிவிக்க உள்ளார்

லைட்ஸ் ஆன் - 1
இந்த வீடியோவுல அந்த சிறுவனுக்கு பக்கத்துல இருக்கிற மற்றொரு மீனவருக்கு அப்படி என்ன அவ்வளவு பதட்டம் ? பொலிசு நமக்கு சொல்லிக் கொடுத்துக்கு நேர்மாறா இந்த 13வயசு பொடியன் உண்மையை போட்டு உடைக்கிறானே அப்படின்னு பயமா ? இல்ல உண்மையை சொன்னா லாக் அப்புல வைச்சு லாடம் கட்டிடுவாங்க அப்படின்னு பயமா ?

லைட்ஸ் ஆன் - 2
சிறுவன் சிறீலங்கா நேவி என்று சொல்ல, அவசரம் அவசரமாக விடுதலைப்புலிகள் அப்படின்னு சொல்லு என்று கிசுகிசுப்பது தெள்ள தெளிவாக தெரியுதே மக்கா ....








உண்மையை வெளி உலகுக்கு கொண்டு வந்து மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி

6 comments:

Anonymous said...

எப்படி அப்பு இப்படி எல்லாம் பதிவு போட முடிகிறது? கவனம் ஆட்டோவரும் அல்லது போலீஸ் ஜீப்பு வரும்:-)

Anonymous said...

அந்தச் சிறுவனுக்குப் பக்கத்தில் நிற்பவரைப் பார்க்கச் சிரிப்பாக உள்ளது, அதாவது மிகவும் பயத்தில் நிற்பது போன்று (body language)தெரிகின்றது. அந்தச் சிறுவன் சிறிலங்கா நேவி என்று கூறியதும் அவர் முகத்தில் ஏற்படும் மாறுதல்... அவர் அந்தச் சிறுவனைக் கோபமாகப் பார்ப்பதும்... காதில் ஏதோ கூறுவதும்... அவர் கூறுவது என்ன என்று தெளிவாகக் கேட்கவில்லை...

said...

//காதில் ஏதோ கூறுவதும்... அவர் கூறுவது என்ன என்று தெளிவாகக் கேட்கவில்லை...//

விடுதலைப்புலிகள் என சொல்ல வருகிறார். விடு.. என்பது கேட்கிறது. மக்கள் ஆனால் அவர் சொன்னதன் பிறகும் பொடியன் ஆப்பு வைக்கிறான் பாருங்க..

Anonymous said...

You Sri Lankan Tamils/Criminals have very well writers. No Indians or any famous writers can write any articles that is better appealing than our works

Anonymous said...

This is not the first time that the TN fishermen are killed by the SL navy - this has been going on for a long time and anyone who reads Tamil magazines like Ananda Vikatan, Kumudam would have come across many articles related to these incidents.

1) It is pretty well known that the TN ppl were a bit openly condemning the recent events inclduing the sencholai massacre against which a resolution was passed in the TN assembly.

2) The Tamil fishermen killing also resulted in agitations supported by the ppl and political parties.

3) IF it was done by the sinhalese navy, BOTH the Indian govt and the sinhalese govt would stand to lose a lot since the support to eelam would become more loud.

India has every reason to hide it from the common man in TN just as the sinhalese would love to have it.

Anonymous said...

dinamalar article...
உடனே, விடுதலைப் புலிகள் தங்களிடம் இருந்த, "வயர்லெஸ்' மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு பேசினர். "ஆயுதங்கள் பத்திரம். அவர்கள் ரொம்பவும் தொல்லை செய்தால், சுடுங்கள்' என்று புலிகளின் தலைமையகத்தில் இருந்து பதில் தகவல் கிடைத்துள்ளது.

1) So, they were drifting for about 12 days with a WIRELESS set with which they communicated earlier on with LTTE command center - why didnt they use it again to ask for help from the command center or manavallan's boat ???